Monday, August 3, 2015

நவரத்தினம் கல் மோதிரம் போடலாமா?

                   நவரத்தினம் கல்  மோதிரம்  போடகூடாது . ஏன் என்றால் ஒருவர் பிறந்த  ஜாதகத்தில்  9 கிரகங்களும்சாதகமான  சூழ் நிலையில்  இருக்காது .அதனால் நவரத்தின கல் அணிவதை தவிர்ப்பது நல்லது .அவரவர்  ஜாதகத்தை  ஆராய்ந்து  அணிவது மிக சிறப்பு .




மேஷராசி  காரர்கள்  பவளம்  மோதிரம்  அணியும்போது  கவனிக்கவேண்டியது . மேஷராசிக்கு செவ்வாய்  பகவான்  1மற்றும்  8ம்  இடத்துக்கு  உரியவர் செவ்வாய் கேந்திரம்திரிகோணம்அடைந்தால் நன்மைமேலும்  நட்பு  சாரம்பெற்றால்  நல்லபலன்களும்அம்சத்தில்  கெட்டுவிட்டாலும் , பிறந்தநட்சத்திரத்தில்  இருந்து , 3,5,7,12.14,16,21,23,25. நட்சரத்தில் இருந்தால்  பலன் கிடைக்காது . லக்னத்தின் அடிப்படையில்  யோககாரர் யார்  என்பதை  ஜாதகத்தில்  அறிந்து  கொண்டு  ராசிமோதிரம்  அணிவது மிகுந்த பலன்  கொடுக்கும் .
ரிஷபம் ராசிகார்கள் நிறையபேர் வைரம் மோதிரம் அணி...ரிஷப  ராசிகாரகர்கள்  சுக்கரனை அதிபதியாக  கொண்டவர்கள் . சுக்கிரன்  ரிஷப  ராசிக்கு  1ம்  மற்றும்  6ம் வீட்டுக்கு  உடையவர் .லக்னத்தை  அடிபடையாக வைத்து போடலாம்
ரிஷப  ராசிகாரகர்கள்  சுக்கரனை  அதிபதியாக  கொண்டவர்கள் . 
சுக்கிரன்  ரிஷப  ராசிக்கு  1ம்  மற்றும்  6ம் வீட்டுக்கு  உடையவர் . லக்னத்தை  அடிபடையாக  வைத்து பார்ப்பது  மிகவும்  சிறப்பானது . 
ரிஷப லக்னத்துக்கு  1,2 ,4,6,7.9,10,11. இந்த  இடங்களில்  நட்பு  சாரம்  
பெற்று  இருந்தால்  வைரம் மோதிரம்  அணிவது  சிறப்பு  பலன்களை  
கொடுக்கும் . மேலும்  அம்சத்திலும்  நல்ல  இடத்தில்  இருக்கவேண்டும் . மேலும்  6ம்  இடத்தில  ஆட்சி பெற்று  இருந்தால்  வியாதியை  
கொடுக்கும் . கெட்ட கிரங்களின்  சேர்கை  பெறகூடாது .பிறந்த  
நட்சத்திரத்தில்  இருந்து 3,5,7,12,14,16,17,21,25. இந்த நட்சத்திரத்தில்  
இருந்தால்  வைரமோதிரம்  அணிவது  சிறப்பல்ல . மேலும்  ரிஷப  
லக்னத்துக்கு  புதன்  யோகாதிபதி . ஜாதகத்தில்  அவர்  இருக்கும் இடம் 
அறிந்து  மரகத பச்சை  அணிவது  முதல் தர  பலன்  கொடுக்கும் .
மிதுன ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்

மிதுன ராசி , மிதுன லக்ன காரர்கள்  , என்ன ராசிகல்   போடலாம் ? இது சற்று யோசிக்க வேண்டிய விசியம் . இந்த  லக்ன , ராசி காரர்களுக்கு , புதன் , சுக்கிரன் , சனி , மூவரும்  யோகம் கொடுக்ககூடியவர்கள் . புதன்  லக்னத்துக்கு  1ம் . 4ம் வீட்டுக்கு  உடையவர் . சுக்கிரன்  5ம் மற்றும்  12ம் வீட்டுக்கு உடையவர் . சனி பகவான் 8,9 ம்  வீட்டை  உடையவர் . இந்த  லக்ன ,ராசிகாரர்களுக்கு  இந்த மூவரும் கெடக்கூடாது . மேலும்  இந்த  மூவரும்  ராசி மற்றும்  அம்சத்தில்  கெடக்கூடாது . இந்த லக்ன ,ராசிகாரர்களுக்கு  புதனுக்கு  உரிய மரகத பச்சை கல் சிறந்தது . இந்த மூன்று கிரகங்களும்  ஜாதகர்
 
பிறந்த  நட்சத்திரத்தில் லிருந்து  3,5,7,12,14,16,21,23,25 நட்சத்திரத்தில் இருக்க கூடாது .
கடக ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்

கடக ராசிக்காரர்கள் . மற்றும்  கடக லக்ன காரர்களுக்கு  , செவ்வாய்  பகவான் முழு யோகத்தை  கொடுக்ககூடியவர் . இந்த  லக்ன,  ராசிகார்களுக்கு , செவ்வாய்  5ம் மற்றும்  10ம்  வீட்டுக்கு உடையவர் . செவ்வாய் இந்த  லக்ன ,ராசிகாரர்களுக்கு  , கேந்திரம் , திரிகோணம் ( 1,4,5,7,10,11) இடத்தில இருந்தால் மிக சிறந்தபலன்களை  வாரி வழங்குவார் . மேலும்  செவ்வாய் பகவான்  ராசி ,மற்றும்  அம்சத்தில்  கெடகூடாது .மற்றும்  சனி பார்வை , சேர்க்கை இருக்ககூடாது . இந்த மாதிரி  அமைப்புஉடையவர்கள்  பவள கல் மிகசிறந்த பலன் கொடுக்கும் . ஜாதகத்தில்  பிறந்த  நட்சத்திரத்தில் லிருந்து  3,5,7,12,14,15 ,21,23,25, இந்தநட்சத்திரங்களில்  செவ்வாய் பகவான் இருக்க கூடாது .
சிம்ம ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்
சிம்ம ராசிகாரர்கள் . சிம்ம லக்னகாரர்கள் , பவளகள்  அணிவது 
சம்பந்தமாக  ஜாதகத்தை  ஆராய்ந்து அணிவது  நல்லது . 
என்னவென்றால்  , ஸ்திர லக்ன , ராசிகார்களுக்கு  9ம் இடம் பாதகமான  
இடம் . அதனால்தான்  ஆராய்ந்து  அணிவது நல்லது .  இந்த லக்ன 
,ராசிகார்களுக்கு . குரு பகவான் 5ம் மற்றும் 8ம் வீட்டுக்கு உடையவர் . 
அதனால்  இவர்கள்  புஷ்பராகம் கல்  அணிவது  நல்லது .குருபகவான்  
நல்ல இடத்தில் அமர்ந்து , கெட்ட கிரகங்கள்  பார்வை இல்லாமல் 
,அம்சத்தில் கெடாமல் . இருந்தால்  புஷ்பராகம்  அணிவது நல்லது 
.மேலும் ஜாதகத்தில்  பிறந்த நட்சத்திரத்தில் இருந்து  
3,5,7,12,14,16,21,23,25 நட்சத்திரத்தில்  யோகம்  தரக்கூடிய  கிரகம்  
இருந்தால்  நன்மை இல்லை .

கன்னி ராசிலக்னகாரர்கள் ,சனி பகவானின்  நீல கல் மோதிரம் அணியலாம் .சனி பகவான்  பஞ்சமாஸ்தானாதிபதி , கன்னி ராசி ,லக்ன காரர்களுக்கு யோகம்  கொடுக்க கூடியவர் .மேலும்  சனி பகவான்  நீசம்அடைந்தாலோ , அம்சத்தில்  கெட்டுவிட்டலோ , நீலக்கல்  மோதிரம்  அணிவதை தவிர்க்கவும் .கன்னிராசிலக்னகார்களுக்கு  சனி பகவான்  , ஜாதகத்தில் பிறந்த  நட்சத்திரத்தில் இருந்து 3,5,7,12,14,16,21,23,25.இந்த நட்சத்திரத்தில் இருக்க கூடாது . அப்படி இருந்தால்  நீல கல் மோதிரம் அணிவதை தவிர்க்கவும் .

துலாம்  ராசி , லக்ன காரர்கள் , வைர மோதிரம் அணிவதை விட  சனி பகவானின்  நீலக்கல் மோதிரம்சிறந்தது . ஏன் என்றால் , துலாம் லக்ன காரர்களுக்கு  சுக்கிர பகவான் 1ம் மற்றும்  8ம்  வீட்டுக்கு உடையவர் .8ம் இட ஆதிபத்தியம்  பெற்றுள்ளதால் வைர மோதிரம்  அணியக்கூடாது . சனி பகவான் 4ம்மற்றும் 5ம் வீட்டுக்கு  உடையவர் . அதனால் நீலக்கல் மோதிரம் சிறந்தது .மேலும்  துலாம் ராசி ,லக்னகாரர்களுக்கு பிறந்த  ஜாதகத்தில்  சனி பகவான் கெடகூடாது . அம்சத்திலும்  நல்ல இடத்தில இருக்கவேண்டும் . சனி பகவன்  ஜாதகத்தில்  பிறந்த நட்சதிரதிலிருந்து 3,5,7,12, 14 ,16, 21,23, 25 இந்தநட்சத்திரத்தில் இருக்ககூடாது . ஜாதகத்தில்  லக்னத்தின்  அடிபடையாக  கொண்டு மோதிரம்  அணிவதுசிறப்பு .
விருச்சிக ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்

விருச்சிக ராசி ,லக்னகாரர்கள் , குரு பகவானின்  புஷ்பராகம்  அணிவது நல்லது ஏன் என்றால் .குருபகவான்  2ம் மற்றும் 5ம் வீட்டுக்கு உடையவர் , யோகாதிபதி ,அதனால்தான் புஷ்பராகம் அணியவேண்டும்.மேலும்  சந்திர பகவான்  9ம் இடத்துக்கு  உடையவர் , சில பேர்  முத்து மோதிரம்  அணியலாம்  என்றுசொல்வார்கள் ,ஆனால்  அணியக்கூடாது , ஏன் என்றால்  சந்திர பகவான்  விருச்சிக ராசி , லக்னகாரர்களுக்கு  பாதாகாதிபதி  அதனால்  அணியக்கூடாது . மேலும் இந்த லக்ன ராசிகாரகளுக்கு ,குருபகவான்  ஒருவரே யோகம் செய்யக்கூடியவர் . குருபகவான்  ஜாதகத்தில்  பிறந்தநட்சதிரதிலிருது,3,5,7,12,14,16,21,23,25  நட்சத்திரத்தில்  இருக்ககூடாது .
தனுசு ராசிகாரகள் என்ன ராசி கல் போடலாம்

தனுசு ராசி,லக்கினகாரர்களுக்கு , செவ்வாய் பகவானின்  பவள கல்  சிறப்பான பலன் தரும் . இந்த  ராசிலக்கினகார்களுக்கு  செவ்வாய் யோகம்  கொடுக்க கூடியவர் . இந்தஇலக்கின ,ராசிகாரகளுக்கு செவ்வாய் ஆட்சியோ , உச்சமோ பிறந்த  ஜாதகத்தில்  இருந்தால்  , ரியல் எஸ்டேட் , நிலம் , வீடு , இதன் மூலம்பணம் கொட்டும் . மேலும்  இந்த ராசி , இலக்கின காரகளுக்கு  பிறந்த ஜாதகத்தில்  செவ்வாய் பகவான்   ராசியிலும் ,அம்சத்திலும்  கெட கூடாது . மற்றும்  ஜாதகத்தில் பிறந்த நட்சதிரதிளிருந்து  3,5,7,12,14,16,21,23,25. இந்த இடங்களில்  செவ்வாய்  இருந்தால்  பலன் கொடுக்காது .

மகர ராசிஇலக்கின காரர்களுக்கு  வைர கல் மோதிரம் அணியலாம் . ஏன் என்றால் , சுக்கிர பகவான்  5ம்மற்றும் 10ம் வீட்டுக்கு  உடையவர் . இவர் ராசி மற்றும்  லக்கினத்துக்கு , 6,8,12. இடங்களில் மறையகூடாதுமேலும் அம்சத்திலும் கெடக்கூடாது . அதே போல்  ராசியிலும்  , அம்சத்திலும்  நீச்சவர்கோத்தமம் பெற்றீருந்தால் , சுக்கிர புத்தியோ , சுக்கிரதிசையோ மிக பெரிய யோகம் கொடுக்கும் .மேலும் ஜாதகத்தில் பிறந்த நட்சதிரதிளிருந்து , 3,5,7,12,14,16,21,23,25, இந்த இடங்களில் இருந்தால் ,நன்மை நடக்காது


கும்ப ராசி  ,இலக்கின காரர்கள்  வைரம் , மரகத பச்சை கல் மோதிரம் சிறப்பான பலன் தரும் . இந்தஇலக்கின , ராசிகார்களுக்கு  , சுக்கிரன்  4ம் ,மற்றும் 9ம் இடத்துக்கு  உரியவர் . மற்றும் புதன்  5ம் மற்றும்  8ம்  இடத்துக்கு  உரியவர் . புதன் மற்றும் சுக்கிரன்  சேர்ந்து இருந்தாலோ , அல்லது ஒன்றை  ஒன்றுபார்த்துகொண்டலோ , மிக பெரிய யோகம்  கொடுக்கும் . இவை  , கேந்தரம்,மற்றும்  திரிகோணத்தில் இருந்தால்  மட்டுமே நல்ல பலன் கொடுக்கும் . மேலும்  அம்சத்தில் கெடகூடாது . ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரத்தில் லிருந்து  3,5,7,12,14,16,21,23,25. இடங்களில்  இந்த  இரண்டு கிரகங்களும்  இருக்ககூடாது .


மீன ராசி  ,லக்கினகாரகளுக்கு . முத்து மற்றும் பவள கல்  மோதிரம்  நல்ல பலன் கொடுக்கும் . சந்திரபகவான் 5ம்  இடத்துக்கு  உரியவர் . மேலும்  வளர்பிறை  சந்திரனாக  இருந்தால்  மட்டுமே  முத்து மோதிரம் அணியலாம் . தேய்பிறையாக  இருந்து , குரு  பார்வை பெற்றால் முத்து மோதிரம் அணியலாம்.மற்றும்  செவ்வாய் பகவான்  2ம் மற்றும் 9ம் வீட்டுக்கு  உடையவர் . அதனால்  பவள கல் மோதிரம்அணியலாம் . மேலும் இந்த  இரண்டு கிரகங்களும்  ராசி , அம்சத்தில் , கெட கூடாது . மற்றும் ஜாதகத்தில்பிறந்த நட்சத்திரத்தில் லிருந்து 3,5,7,12,14.16,21,23,25இந்த இடங்களில் இருக்ககூடாது .

No comments:

Post a Comment